

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் உள்ள நந்தியைக் காட்டிலும், மைசூர் சாமுண்டி மலையில் உள்ள நந்தியைக் காட்டிலும் மிகவும் பெரியது பெங்களூரு பசவங்குடியில் உள்ள நந்திகேஸ்வரர் ஆலயத்தில் அருளும் நந்தி. இங்கே நந்தியெம்பெருமானே மூலவராக இருக்கிறார். பெரிய கருவறையை அடைத்துக்கொண்டு, உத்திரத்தை தொட்டுக்கொண்டு பூதாகாரமாகப் படுத்திருக்கும் கோலத்தில் காட்சியளிக்கிறார். சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கெம்பகௌடா என்ற பக்தர் கட்டிய ஆலயம் இது.
நம் நாட்டில் உள்ள எல்லா சிவாலயங்களிலும் நந்தியெம் பெருமான் சிவலிங்க வடிவத்துக்கு எதிரில் அடக்கத்தோடு அமர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறோம். ஆனால் இங்கு மட்டும்தான் நந்திகேஸ்வரர் என்று திருநாமம் கொண்டு தனி ஆலயத்தில் தனிச் சந்நிதியில் மூலவராகக் காட்சி தருகிறார். இதுபோல நந்திக்கு வேறு எங்கும் கோயில் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.